நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவுக் கு வெற்றி பிரகாசம்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவு ஆளும் தி மு கவுக்கு படிப்பினையாக அமையும் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ:

மதுரை:

தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளுகின்ற திமுகவுக்கு நிச்சயம் படிப்பினையாக அமையும் என்று தமிழக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்தார்.
மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள மீனாட்சி மகளிர் அரசினர் கலைக்கல்லூரியில், தமிழக கூட்டுறவு துறையின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தனது குடும்பத்தாருடன் வாக்குச் செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெரும் குழப்பத்தை செய்துள்ளது. குறிப்பிட்ட ஒரு வார்டைச் சேர்ந்த வாக்காளர்களை வேறொரு வார்டில் இணைத்துள்ளனர். இது போன்ற நிறைய குளறுபடிகள் உள்ளன. தேர்வு செய்யப்பட்டு வருகின்ற பிரதிநிதிகள் எவ்வாறு மக்கள் பணியாற்ற முடியும்?
திமுகவைப் பொறுத்தவரை அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நடைபெறுகின்ற தேர்தல்களில் அத்துமீறலை வழக்கமாக கொண்டுள்ளனர். அது இந்தத் தேர்தலிலும் நடைபெறுகிறது. நடிகர் விஜய் இந்த முறை காரில் வந்து வாக்களித்தது என்பது ஜனநாயகத்தின் மீதுள்ள அவரது பற்றுதலை காட்டுகிறது. ஆகையால் இது குறித்தெல்லாம் விமர்சிக்க ஒன்றுமில்லை. எங்களைப் பொறுத்தவரை திமுக தான் எங்களது போட்டி. பிற கட்சிகளை எல்லாம் நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை.
கடந்த, சட்டமன்ற தேர்தலில் நிலவிய மக்கள் மனநிலை தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இல்லை. வார்டு வார்டாக சென்று பரப்புரை மேற்கொண்ட போது பொது மக்களின் மனநிலையை நான் அறிந்தேன். ஆகையால், இந்த தேர்தல் ஆளும் திமுக அரசுக்கு நிச்சயம் படிப்பினையாக அமைவதோடு அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: