Photo

சிவகாசி அருகே ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 4 ஆயிரத்து, 500 கிலோ அரிசி பைகள் பறிமுதல்…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி – திருத்தங்கல் சாலையில், செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் இன்று அதிகாலை, திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவில்லிபுத்தூரிலிருந்து, திருத்தங்கல் வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். லாரியில் 5 கிலோ எடை கொண்ட, 900 அரிசி பைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அரிசி பைகள் யாருக்காக, எங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் இருந்தது. திருத்தங்கல் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, அரிசி பைகள் கொண்டு வரப்பட்டதா என்று போலீசார் விசாரிக்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 900 அரிசி பைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து லாரி ஓட்டுனர் திருப்பதிராஜா என்பவரிடம், திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில், சிவகாசி மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கும் பகுதியில், 900 அரிசி பைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: