ஊர்காவல் படை வட்டார தளபதி பதவிக்கு விண்ண ப்பிக்கலாம்: போலீஸ் எஸ்.பி:

ராஜபாளையம், ஊர்காவல் படை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்.. மாவட்ட எஸ்.பி தகவல்…..

ராஜபாளையம் :

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதி ஊர்காவல் படை வட்டார தளபதி பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பலாம் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊர்காவல் படை வட்டார தளபதி பதவியில் சேர விருப்பமுள்ள 18 வயதிற்கு மேல், 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடல் நலத்துடன், தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். வட்டார தளபதி என்ற கவுரவ பதவிக்கு, விருதுநகர் மாவட்ட காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம் என்று, தகவல் வெளியிட்டுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: