சேத்தூரில், திமுக எம்எல்ஏ பிரசாரம்:

சேத்தூர் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பிரச்சாரம்…..

ராஜபாளையம் :

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பேரூராட்சி தேர்தலில் 18 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், தென்காசி எம்.பி தனுஷ்குமார் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.
எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேசும்போது,
கடந்த முறை திமுக கட்சி ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், திமுக உறுப்பினரின் நிதி மூலம் சேத்தூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான, பேவர்பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தெருக்களிலும் எல்ஈடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. நடக்க இருக்கும் பேரூராட்சி தேர்தலில் திமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன், சேத்தூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும், தொடர்ந்து அரசு வழங்கும் திட்டங்கள் முழுமையாக மக்களை வந்தடைவதற்கு, வாக்காளர்கள் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். எம்.பி தனுஷ்குமார் பேசும்போது, இந்திய நாட்டில் சிறப்பாக பணியாற்றும் முதல்வராக, நமது முதல்வர் ஸ்டாலின் உள்ளார். முதல்வரின் செயல்பாட்டை இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை பாராட்டுகின்றனர். அவரின் தலைமையின் கீழ் செயல்படவுள்ள பேரூராட்சிகளும் சிறப்பான வளர்ச்சி பெறும் என்று பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் கழக செயலாளர் சிங்கம்புலி அண்ணாவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: