மதுரை மாநகராட்சி 36-வது வார்டில் பாஜக வேட்பாளர் தீவிர ஓட்டு வேட்டை:
மதுரை:
மதுரை மாநகராட்சி, 36 -வது வார்டில் போட்டியிடும், பாஜக வேட்பாளர் பசீர் அகமது, பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து, வாக்குகள் சேகரித்தார்.
மேலும், பாஜக என்பது மதவாத கட்சி எனக் கூறியது, எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரம் என, வாக்காளர்களிடம் தெரிவித்தார்.
பசீர் அகமதுடன், பாஜக நிர்வாகிகளான கௌரி சங்கர், சீனி முகமது, அபுதாஹீர், ராஜேஸ் கன்னா, டேனியல் சேகர், விமல், சக்திவேல், பிரசன்னா, ப்ர்தீன் உள்ளிட்டோர் தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.