சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரசாரம்: காங்க ிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் பாதிக்குமா?

சுயேட்சையின் தண்ணீர் குழாய் சின்னம்
காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?
மதுரை, பிப்.15
மதுரை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற முக்கிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக, அதிமுகவில் பல ஆண்டுகள் பணியாற்றியும் கவுன்சிலர் சீட்டு கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிட்டு வருகின்றனர்.
மாநகராட்சி 36-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த எம்.ஷாஜகானுக்கு கட்சியில் சீட் வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஷாஜகான் 36 வது வார்டில் சுயேச்சையாக தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடுகிறார். அன்புஅன்பு நகர், அம்பிகை நகர், தலைவிதி போன்ற குடியிருப்போர் நலச் சங்கங்களின் செயலாளராக உள்ளார். 32 ஆண்டுகளாக கட்சி பணியாற்றிய இவருக்கு திமுகவில் கவுன்சிலர் சீட்டு மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் சேர்ந்து குடியிருப்போர் சங்கங்களின் பிரதிநிதியாக எம்.ஷாஜகானை வேட்பாளராக களமிறங்கி உள்ளனர். இவருக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருப்பதால் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திகேயனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
வேட்பாளர் எம்.ஷாஜகான் கூறியதாவது:
32 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றிய எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் வேட்பாளராக நிறுத்தி உள்ளனர். மக்களின் ஆதரவால் நிச்சயம் வெற்றி பெறுவேன்.
இப்பகுதியில் பாதாள சாக்கடை, தெருவிளக்கு, ரோடு, பிரகாசமான தெருவிளக்குகள், சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். வண்டியூர் கண்மாய் சீரமைப்பு, பொது இடங்களில் சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சியில் நடவடிக்கை எடுப்பேன். அனைத்து பகுதிகளிலும் புகார் பெட்டி அமைத்து மக்களின் குறைகளுக்கு தீர்வு கண்பேன் என்றார்.
அன்பு நகர் காமராஜ், குமார், தாழை வீதி பாக்கியம், விநாயகா ஆட்டோ முத்துகிருஷ்ணன் உட்பட குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: