அமமுக வேட்பாளர் பிரசாரம்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு.. மதுரை..சோழவந்தானில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பு:

சோழவந்தான்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆங்காங்கே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சார்பாக போட்டியிடும் வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஒன்றியக் கழகச் செயலாளர் ராஜன் தலைமையில்,
நகரச் செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் முன்னிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்து வார்டுகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நகரின் முக்கிய வீதிகளில், குக்கர் சின்னம் பொருந்திய பதாகைகளை ஏந்தியும் கொடிகளை பிடித்தும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். இந்தப் பிரச்சாரத்தில், பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: