மிரட்டும் தோனியில் பேசிய அமைச்சர்:

திமுகவினர் தேர்தலில் பாடுபடவில்லையென்றால், நடவடிக்கை: அமைச்சர்:

மதுரை:

வணிகவரிதுறை அமைச்சரும் நன்தான், உள்ளாட்சிதுறை அமைச்சர் நேருவும் நான்தான். தேர்தலில் திமுகவினரின் வெற்றிக்கு துரோகம் நினைக்கும் திமுக கட்சியினரை அடியோடு வேரறுப்பேன் என அமைச்சர் மூர்த்தி மிரட்டல் தோனியில் பேசியது பரபரப்
படைந்துள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் ஸ்டாலினின் எட்டு மாத கால ஆட்சியில் செய்த நலத்திட்டங்களால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுகவின்
வெற்றி 100 சதவீதம் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் எதிர் கட்சியினர் மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் சோழவந்தான் பேரூராட்சியில் கண்டிப்பாக
உதயசூரியன் உதிக்கும்.
சோழவந்தான் பேரூராட்சியில், பினாமியாக வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தில் கொள்ளையடித்த நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக வேட்பாளர்கள், மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்காமல், சுயேட்சைகளின் வெற்றிக்காக உழைத்து துரோகம் செய்யும் திமுகவினரை தேர்தல் முடிந்தவுடன் அடியோடு வேரறுப்பேன்.
இந்த தேர்தல் முடிந்து நகராட்சிகளுக்கும் பேரூராட்சிகளுக்கும் நலதிட்டங்கள் செய்யபோவது யார் முதலமைச்சர் ஸ்டாலின்தான். இங்கு வணிகவரிதுறை அமைச்சரும் நன்தான், உள்ளாட்சிதுறை அமைச்சர் நேருவும் நான்தான் என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: