வருடாபிஷேக விழா:

சோழவந்தான் துரௌபதியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா:

சோழவந்தான்:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம்,
சோழவந்தான் துரோபதை அம்மன் கோவில் வருடாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, பரம்பரை பூசாரிகள் அர்ஜுனன்,திருப்பதி, ஜவர்கலால்,குப்புசாமி, ஆதி பெருமாள் ஆகியோர் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். துரோபதை அம்மனுக்கு திருமஞ்சனம், பால்,பன்னீர் உட்பட 12 அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இக்கோவிலில் உள்ள விநாயகர்,
கருப்புசாமி, அகோர வீரபத்திரர், நாககன்னி, கமலக்கண்ணி, சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
பரம்பரை பூசாரிகள் மற்றும் கோவிலைச்
சேர்ந்தவர்கள் வருடாபிஷேக
விழா ஏற்பாடுகளை, செய்திருந்தனர். பரம்பரை பூசாரி மற்றும் கோவிலைச் சேர்ந்த குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: