அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு:

சிவகாசி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும், அதிமுக கட்சியினர் வாக்கு சேகரிப்பில் சுறுசுறுப்பு…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறது. முதல் மேயர் பதவியை பிடிப்பதற்காக அதிமுக, திமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு பணிகளை துவக்கி விட்டனர். திருத்தங்கல் நகராட்சியின் முன்னாள் துணை தலைவரும், அதிமுக கட்சியின் திருத்தங்கல் நகர செயலாளருமான பொன்சக்திவேல், 3வது வார்டில் போட்டியிடுகிறார். அந்தப்பகுதியில் உள்ள திருப்பதி நகர், ஆலாவூரணி, அண்ணா காலனி பகுதிகளில், பொன்சக்திவேல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தப்பகுதிகளில் பெரும்பாலும் பட்டாசு ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்றனர். எனவே பட்டாசு தொழிலை பாதுகாக்க, அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது எடுத்த நடவடிக்கைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வேட்பாளர் பொன்சக்திவேல் வீடு வீடாக சென்றும், வீதிவீதியாக சென்றும் அதிமுக கட்சிக்கு வாக்குகள் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். திருத்தங்கல் பகுதிகளில் அதிமுக கட்சியினர் வாக்கு சேகரிப்பு பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: