வத்திராயிருப்பு அருகே பணம் பறிமுதல்:

வத்திராயிருப்பு அருகே, ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி:

மதுரை:

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில்,
ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் சங்கரன் மற்றும் பறக்கும்படை குழுவினர் திருவில்லிபுத்தூர் – வத்திராயிருப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் இருந்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை,
வ.புதுப்பட்டி பேரூராட்சி தேர்தல் அலுவலர் சிவ அருணாச்சலத்திடம் ஒப்படைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: