வாடிப்பட்டி பேரூராட்சியில் மனுக்கள் ஏற் பு:

வாடிப்பட்டி பேரூராட்சியில்
91 வேட்பு மனுக்கள் ஏற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு வார்டு கவுன்சிலர் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி நேற்று முன்தினத்துடன் முடிவ டைந்தது. நேற்று வேட்புமனு பரிசீலனை பேரூராட்சி அலுவல கத்தில் நடந்தது தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகம் தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள் சரவணன், திருப்பதி ஆகியோர் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. வார்டு வாரியாக மனுக்கள் விபரம் வருமாறு 1 வது வார்டு 8, 2 வது வார்டு 3, 3 வது வார்டு 3, 4வது வார்டு 3,5வது வார்டு 5, 6வது வார்டு 6, 7வது வார்டு 3,8வது வார்டு 5, 9வது வார்டு2, 10 வது வார்டு 6, 11வது வார்டு 6,12வது வார்டு 6,13வது வார்டு 8, 14 வது வார்டு 5, 15வது வார்டு 8, 16 வது வார்டு 6, 17வது வார்டு 4, 18 வது வார்டு 4 மொத்தம் 91. இந்த மனுக்களில் இணைப்புக்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்தும் ஏற்றுக்கொள்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: