காரியாபட்டியில் மு.க அழகிரி பிறந்தநாள் விழா:
காரியாபட்டி – ஜன.31
காரியாபட்டியில் மு.க அழகிரி பிறந்தநாள் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மு.க அழகிரி பாசறை சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, அழகிரி பாசறை மாவட்ட பொறுப்பாளர் கருப்பு தலைமை வகித்தார். மொச்சிகுளம் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பேரவை நிர்வாகிகள் வக்கீல் அக்னிதேவன் சின்ன ராமு, சந்தியாகு ராஜேந்திரன் சோலை பாண்டியன் கணேசன் தர்மலிங் கம் ஆகியோர் கலந்துகொணடனர்.