மதுரையில், அலங்கார ஊர்திக்கு அமைச்சர் மர ியாதை:

மதுரையில், அலங்கார ஊர்திக்கு அமைச்சர் மரியாதை:

மதுரை:

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் அலங்கார ஊர்தி: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், மதுரை தெப்பக்குளத்தில் பொதுமக்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டிருக்கும் "விடுதலைப் போரில் தமிழகம்" -தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் அலங்கார ஊர்தியினை,
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்ற முதலமைச்சர்
மு க ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து, மதுரை மாநகருக்கு வருகை தந்த
குடியரசு தின அலங்கார ஊர்தியை மதுரை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர் .
மதுரை வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில், ஜனவரி 31ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக தற்போது அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை வந்துள்ள ஊர்தியில் வேலூர் சிப்பாய் புரட்சி, மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகு முத்துக்கோன், காளையார்கோவில் கோபுரம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின்போது, மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: