மதுரை நகர கிரைம் செய்திகள்:

உத்தங்குடியில்
நிதி நிறுவனத்தில் புகுந்து திருட்டு
மர்ம ஆசாமி கைவரிசை:

மதுரை உத்தங்குடியில், நிதி நிறுவனத்தில் புகுந்து திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
உத்தங்குடி ஜே.சி.பி.காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் 62.இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று, இவரது நிறுவனத்தில் புகுந்த மர்ம நபர் அங்கு இருந்த பணம் ரூபாய் முப்பதாயிரத்தை திருடிச்
சென்றுவிட்டனர்.
இந்த திருட்டு குறித்து, உரிமையாளர் ராமலிங்கம் கொடுத்த புகாரில், கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு ஆசாமியை தேடிவருகின்றனர்‌.

கே.புதூரில்
ஐ.டி.ஐ.மாணவி தற்கொலை:

மதுரை
புதூரில், ஐ.டி.ஐ.மாணவி தூக்குப்
போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
கே.புதூர் கணபதி
சேர்வை தெருவை சேர்ந்தவர் முருகேசன்.
இவரது மகள் கிருத்திகா 18.
இவர் புதூர் ஐ.டி.ஐ.யில், பியூட்டிசன் கோர்ஸ் படித்து வந்தார்.
இந்நிலையில், அவருக்கு வேலைக்கு செல்வதில் ஆர்வம் ஏற்பட்டது.
படிப்பை முடித்துவிட்டு, வேலைக்கு
செல்லலாம் என பெற்றோர் கூறியுள்ளனர்.
இதனால், மனமுடைந்த கிருத்திகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, புதூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

குடிப்பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்ததால்
மனமுடைந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை:

மதுரை
பி. பி.குளம் முல்லை நகரை சேர்ந்தவர் வீரப்பன் 60. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
தினமும் குடித்து கொண்டிருந்தார். இதை வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அவரது பழக்கத்தை மாற்றிக் கொள்ளும்படி கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த வீரப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு:

மதுரை கொரோனா நோயால், பாதிக்கப்பட்ட முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார்.
சிம்மக்கல் பஜனை மடத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 69.
இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சோதனை செய்ததில், கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால், அவரை மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா
வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்தனர் .
இந்த நிலையில், சிகிச்சை பலன் இல்லாமல் முதியவர் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ,திலகர்திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிக்க பணம் தர மனைவி மறுப்பு கணவர் தூக்கு போட்டு தற்கொலை:

மதுரை காமராஜர் சாலை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ராஜகுரு 45. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது தினமும், குடித்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் .
அதற்கு மனைவி மறுத்து விட்டார். இதனால் ,மனம் உடைந்த ராஜகுரு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ,திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் கால் முறிவு
மனமுடைந்த
கணவர் தூக்கு போட்டு தற்கொலை:

மதுரை, திருநகர் சீனிவாச நகர் மெயின் வீதியை சேர்ந்தவர் ராஜா பிரகாஷ் 45. இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு காலில் முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மன அழுத்தத்துடன் இருந்து வந்த ராஜகுரு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, மனைவி முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில், திரு நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பனின் மரணம்
மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை:

மதுரை, சுப்பிரமணியபுரம் ஹரிஜன் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் திருப்பதி 27. இவரது நண்பர் திடீரென்று இறந்துவிட்டார். இதனால், திருப்பதி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில், துக்கம் தாளாமல் வீட்டில் தூக்குப்போட்டு திருப்பதி
தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, திருப்பதியின் மனைவி தமிழ்ச்செல்வி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: