மதுரையில் வாகனங்கள் ஏலம்: போலீஸ் எஸ்.பி:

வாகனங்கள் ஏலம்: போலீஸ் எஸ்.பி.

மதுரை:

மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 51 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 73 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
வருகின்ற 31.01.2022 ம் தேதி காலை 10 மணிக்கு, மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து, பொது ஏலம் நடைபெறுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர், 29.01.2022 மற்றும் 30.01.2022-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ,
மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 31.01.2022 காலை 8 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் 5000 முன் பணம் செலுத்தி, பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் .
ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% ) முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கெரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். என ,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி பாஸ்கரன், தெரிவித்
துள்ளார்கள். ‌

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: