நேதாஜிக்கு மாலை அணிவிப்பு:
மதுரை:
அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை நகைக் கடை பஜாரில் அமைந்துள்ள நேதாஜி சிலைக்கு, பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஷோபனா,
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன், மாவட்ட தொழில் சங்கத் தலைவர் ராஜன், அருண்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.