சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள்:

கொரோனா எதிரொலி – மதுரையில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது:

மதுரை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிறுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்
பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை இறைச்சி கடைகளும் மூடப்படுவதால், மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள மீன், ஆடு, கோழி ஆகிய இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதி வருகிறது.
நாளை இறைச்சி கடைகள் முழுவதுமாக மூடப்படுவதால், அசைவ பிரியர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதால் இன்றே இறைச்சிகளை வாங்கி இருப்பு வைக்க காலை 6 மணிக்கெல்லாம் இறைச்சி கடைகளில் மக்கள் குவிய தொடங்கியுள்ளனர். இன்று மாலை வரை கூட்டம் மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், இதற்காக மீன்கள் கடைகளில் குவிக்கப்பட்டும், இறைச்சி கோழிகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: