மதுரை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட ்டி, பொருட்களை பாராட்டும் பொதுமக்கள்:

மதுரை மாவட்டம்
கூட்டுறவுத்துறையின் சார்பில்,
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு,
தமிழ்நாட்டு மக்கள் பொங்கல் பண்டிகையை இனிதே கொண்டாடும் வகையில் 21 வகையான மளிகைப் பொருட்களை உள்ளடக்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கும் மதுரை மாவட்ட பொதுமக்கள்:

மதுரை:

உலகிற்கே அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும் உழைப்பின் சிறப்பையும்
உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும் உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னாளாகவும் சாதி மத பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் – தமிழினம் என்ற உன்னத உணர்வைப் பிரதிபலிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்
படுகின்றது.
இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில்,
தமிழக முதலமைச்சர், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கடுகு சீரகம், நெய், மிளகு,புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம்இ அரிசி, முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு நீளக்கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.
இதன்படி,
தமிழக முதலமைச்சர்,
பொது விநியோகத் திட்ட அரிசி பெறும் மின்னனு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை
தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும்
21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 04.01.2022 அன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்திலும் கடந்த 04.01.2022 அன்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு, மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்
துறையின் கீழ் இயங்கி வரும் முழுநேர நியாயவிலைக் கடைகள், பகுதிநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகள் என அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இப்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள 1394 நியாய விலைக்கடைகளில் உள்ள 9 இலட்சத்து 17 ஆயிரத்து 537 குடும்ப அட்டைதார்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் ஆயிரத்து 718 குடும்ப அட்டைதாரர்களுக்கும் சேர்த்து ஆக மொத்தம் 9 இலட்சத்து 19 ஆயிரத்து 255 குடும்ப அரிசி
அட்டைதாரர்களுக்கு 46 கோடியே 42 இலட்சத்து 23 ஆயிரத்து 775 ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து ,குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணி தொடர்ந்து
நடைபெற்று வருகின்றது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் 1) ஒரு கிலோ பச்சரிசி 2) ஒரு கிலோ வெல்லம் 3) 50 கிராம் முந்திரி 4) 50 கிராம் உலர் திராட்சை 5) 10 கிராம் ஏலக்காய் 6) 500 கிராம் பாசிப்பருப்பு 7) 100 கிராம் நெய் 8) 100 கிராம் மஞ்சள் தூள் 9) 100 கிராம் மிளகாய் தூள் 10) 100 கிராம் மல்லித்தூள் 11) 100 கிராம் கடுகு 12) 100 கிராம் சீரகம் 13) 50 கிராம் மிளகு 14) 200 கிராம் புளி 15) 250 கிராம் கடலைப் பருப்பு 16) 500 கிராம் உளுந்தம் பருப்பு 17) ஒரு கிலோ ரவை 18) ஒரு கிலோ கோதுமை மாவு 19) 500 கிராம் உப்பு 20) ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் 21) அழகிய துணிப்பை அடங்கிய 21 வகையான பொருட்கள் உள்ளன.
இத்திட்டதின் கீழ் பயனடைந்த மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்த .சீதாராமன் தெரிவிக்கையில்:-
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட வெல்லம், அரிசி, கரும்பு, பாசிப்பருப்பு, ஆவின் நெய் என்று பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மட்டுமின்றி புளி, மஞ்சள் துள், மிளகாய்த்தூள் என்று மளிகை பொருட்களையும் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல்
பரிசுத்தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர், வழங்கியுள்ளார்கள். இந்த பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் உள்ளதால், எங்களை போன்ற ஏழ்மையில் உள்ள அனைத்து குடும்பங்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட முழுநீளக்கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ,எனது சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மட்டுமல்லாமல் பொங்கல் பண்டிகையை குடும்பத்தோடு சிறப்பாக கொண்டாடிட தேவையான 21 வகையான பொருட்களையும் வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து தரப்பு மக்களும் என்றென்றும் நன்றி கடன்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தொகுப்பு:
இ.சாலி தளபதி எம்.ஏ.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதுரை.
ம.கயிலைச் செல்வம் பி.இ.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மதுரை.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: