காமிரா சர்வீஸ் சென்டரில், தீ விபத்து:

கேமரா சர்வீஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு:

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராக்கள் தீயில் கருகின:

மதுரை:

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, இவர் கேமரா சர்வீஸ் சென்டரை ,மதுரை நேதாஜி ரோடு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கரும்புகை வெளியேறியது.
உடனே, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு போலீசார் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தொடர்ந்து, கேமரா சர்வீஸ் சென்டரில் விலை உயர்ந்த கேமரா மற்றும் லேப்டாப் உள்ளிட்டவைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், லட்ச மதிப்பிலான கேமரா மற்றும் உபகரணங்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, கடையில் உள்ள மின்சாதன பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, சம்பவம் குறித்து திடீர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: