மதுரை கிரைம் செய்திகள்:

சாலையோரம் மீன் கடை வைப்பதில் தகராறு
பெண் உள்பட 2 பேர் கைது:

மதுரை ஜன 16:

மதுரை
கரிமேடு அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அழகம்மாள் 45. அதே பகுதியை சேர்ந்தவர் மொய்சன் தேவசகாயம் 26 .இவர்கள் இருவருக்கும் கரிமேடு மீன் மார்க்கெட் முன்பு புது ஜெயில் ரோட்டில் சாலையோரம் மீன்கடை வைப்பதில் தகராறு ஏற்பட்டது.
இது சம்பந்தமாக, அழகம்மாள் கொடுத்த புகாரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோரிசன் தேவசகாயத்தையும்,அவர் கொடுத்தபுகாரின்பேரில் அழகம்மாளையும் கைது செய்தனர்.

பெரியார் பேருந்து நிலையம் அருகே வாளை காட்டி மிரட்டல்
வாலிபர் கைது:

மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் உசேன் 45 .இவர் பெரியார் பேருந்து நிலையம் அருகே ஹயத் கான் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பேர் அவரை வழிமறித்து வாளை காட்டி மிரட்டினர். இந்த சம்பவம் குறித்து உசேன் திடீர்நகர் போலீசில்புகார் செய்தார். போலீசார் மேலவாசல் நாகராஜ் என்ற அஜித் நாகராஜ், மாரிமுத்து 23 ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

கூடல் புதூரில்
மனைவி நோய்வாய்ப்பட்டதால் மனமுடைந்த கணவர் தற்கொலை :

மதுரை
விளாங்குடி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் கண்ணன்51. இவருடைய மனைவி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் .இதனால் மனம் உடைந்த கண்ணன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் குளிக்கும்போது
பாத்ரூம் கதவை தட்டிய வாலிபர் கைது:

மதுரை
உலகநேரியில், பெண் குளித்துக் கொண்டிருந்த போது பாத்ரூம் கதவை தட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் .
உலகநேரி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு தெரியாமல் வேண்டுமென்றே அதே பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவர் பாத்ரூம் கதவை தட்டிய தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் முன்விரோதம் காரணமாக ராஜதுரை மற்றும் விஜய் இருவரும் அந்த பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில், மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் 22 என்ற வாலிபரை கைது செய்தனர்.

கீரைத்துறையில்
மண்ணுளிப் பாம்பை மறைத்து வைத்திருப்பதாக வீடு புகுந்து தாக்குதல்
ஒருவர் கைது:

மதுரை, கீரைத்துறையில் வீட்டிற்குள் மண்ணுளி பாம்பு பதுக்கி வைத்திருப்பதாக வீடு புகுந்து தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் .
சிந்தாமணி கோதண்டராமன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் 37 .கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சித்தி கணேசன் என்ற சூர்யா25.லோகநாதன் வீட்டில் அத்துமீறி நுழைந்த சித்திகணேசன் அவரது வீட்டில் மண்ணுள்ளி பாம்பு பதுக்கிவைத்திருப்பதாக கூறி மிரட்டி கத்தியால் தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து லோகநாதன் கொடுத்தபுகாரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவுசெய்து சித்திகணேசன் என்ற சூர்யாவை கைது செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: