விவேகானந்தர் ஜயந்தி விழா:

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், விவேகானந்தர் ஜயந்தி விழா:

மதுரை:

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், சுவாமி விவேகானந்தரின் 159-வது ஜயந்தி மற்றும் தேசிய இளைஞர் தினம் இணையவழி மூலம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல்வர் முனைவர் வெங்கடேசன், செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி, அகத்தர உத்தரவாத மைய ஒருங்கிணப்பாளர் முனைவர் சதீஷ்பாபு, முதன்மையர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் அந்தந்தத் துறைசார்ந்த துறைத் தலைவர்கள் முனைவர் நாகேந்திரன், முனிவர் பட்டினத்தார், முனைவர் கார்த்திகேயன், ஜெய்சங்கர், சேர்வாரமுத்து, முனைவர் ரமேஷ், முனைவர் சண்முகவேலு, பாலாஜி, முனைவர் சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியினை, இணையவழி மூலம் மாணவர்களே பங்கு பெறும் விதத்தில் சிறப்பாக நடத்தினர். துறை சார்ந்த விவேகானந்த கல்லூரி மாணவர்கள், விவேகானந்தரின் புகழைப் போற்றும் விதமாக பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். முக்கியமாக பாரத தேசத்தில் இன்றைய இளைஞர்களின் பொறுப்பு பற்றியும், இந்திய கலாச்சார பண்பாட்டு சிறப்பின் அவசியம் பற்றியும், இந்தியக் கல்வி திட்டம் பற்றியும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கு பற்றியும் இந்திய இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் இலட்சியங்கள் பற்றியும் இன்றைய தேசிய இளைஞர் தினத்தில், திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் சிறப்புரை ஆற்றினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: