பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகள்: ஆய்வு:

பாலமேடு ஜல்லிக்கட்டு: அதிகாரிகள் ஆய்வு:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற 15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள நிலையில், வணிக வரித் துறை மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி ,மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ,மதுரை சரக டிஐஜி பொன்னி, தென் மண்டல ஐஜி அன்பு, மாவட்ட எஸ்பி வீ. பாஸ்கரன், பூமிநாதன் எம்.எல்.ஏ. மாவட்ட திமுக அவைத் தலைவர் எம் .ஆர். எம். பாலசுப்ரமணியன்,மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர் சிகி பிரேமலதா,
பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி
ஆகியோர் ஜல்லிக்கட்டு, நடைபெற இடத்தை பார்வையிட்டனர். இதில், பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டித் தலைவர் மலைச்சாமி, பொருளாளர் பிரபு, செயலாளர் சோதி தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: