பஞ்சாப் அரசைக் கண்டித்து, பாஜக வர்த்தக அ ணி, மனித சங்கிலி:

பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து, மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வர்த்தக அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம்:

மதுரை:

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப்பில் பல்வேறு நலத்திட்ட திட்ட பணிகளை அடிக்கல் நாட்டும் வரும்போது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் பங்கம் விளைவித்து பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தக அணி சார்பில், அதன் மாநிலத் தலைவர் ராஜ் கண்ணன், தலைமையில்
இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் , மதுரை பாரதிய ஜனதா கட்சி மாநகரத் தலைவர் டாக்டர் சரவணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த, கண்டன மனித சங்கிலி போராட்டத்தில், பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் .
இதில், பாரதிய ஜனதா கட்சி அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: