காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பள்ளி மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.
காரைக்குடியில்
ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது இப்பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவி குறள்சூடி உமையாள் மெய்யம்மை என்ற மாணவி கடந்த 11ந்தேதி 31 நொடிகளில் தமிழ் எழுத்துக்களை (247) முழுமையாக ஒப்புவித்து மற்றொரு உலக சாதனை படைத்துள்ளார்
13வயது சிறுமி மற்றும் காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பள்ளி மாணவியுமான குறள்சூடி உமையாள் மெய்யம்மைக்கு ஆல் இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் நிறுவனத்தால் உலக சாதனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது
இம்மாணவியை ஸ்ரீ ராஜராஜன் கல்வி குழுமத்தின் ஆலோசகரும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சுப்பையா பாராட்டினார்.
இம்மாணவி ஏற்கனவே திருப்பாவை 30 பாடல்களை 5.28 நிமிடங்களில் ஒப்புவித்து உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
Virus-free. www.avast.com |