சாலை விபத்தில் மாணவி சாவு:

கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி:

மதுரை:

மதுரை கோச்சடை நடராஜ் நகரை சேர்ந்த சுரேஷ். இவரது மகள் மாதங்கி (22). மதுரை பீ. பீ குளத்திலுள்ள தனியார் கல்லூரியில் படிப்பை முடித்து, மேற்படிப்புக்காக மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்காக படிப்பினை படித்துக் கொண்டிருந்தார். மருந்து சம்பந்தப்பட்ட ஆய்வுக்காக இவர் மற்றும் அவரது தோழியும், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு பணியை முடித்துவிட்டு மானகிரி அருகே வரும் பொழுது, பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியது . இதில் பலத்த காயமடைந்த மாதங்கி அங்கிருந்த பொதுமக்களால் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனில்லாமல் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: