சாலையில், சுற்றி திரிந்தவர்களுக்கு போலீ ஸார் அபராதம்:

இராசபாளையத்தில் சாலையில் சுற்றி திரிந்தோருக்கு அபராதம்: போலீஸார் நடவடிக்கை:

விருதுநகர்:

கொரோனா மூன்றாம் அலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதித்த தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல், சாலைகளில் சுற்றித் திரிந்த 100-க்கும் மேற்பட்ட
நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வழக்கு தொடர்ந்தனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் காவல் துறையினர் முழு ஊரடங்கு முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மதிக்காமல் சாலைகளில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர்.
காவல்துறை எச்சரித்தும், அதையும் மதிக்காமல், சுற்றித்திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிபவர் மீது வழக்கு தொடரப்படும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: