விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு உயர்வு:

விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கிடுகிடு உயர்வு…..

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் 3வது அலை, அதி வேகமாக பரவி வருகிறது என்று சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரை தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. சில நாட்களில் தொற்று பாதிப்பு இல்லாத நிலையும் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக, தொற்று பாதிப்பு தினம்தினம் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 83 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்து 695ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 240 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று 3வது அலையின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடு விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: