மதுரை நகர குற்றச் செய்திகள்:

கூடல் புதூரில்
29லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் கூண்டோடு திருட்டு:
மதுரை:

மதுரை
கூடல் புதூரில் ரூபாய் 29 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை கூண்டோடு திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை கூடல்புதூர் மகாத்மா காந்தி நகர் அமராவதி நதி தெருவில் ரூபாய் இருபத்தி எட்டு லட்சத்து 82ஆயிரத்து 385 மதிப்புள்ள செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது.இந்த செல்போன் டவரை கூண்டோடு மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக அதன் நிர்வாக அதிகாரி சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த முத்து வெங்கட கிருஷ்ணன் என்பவர் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்போன் டவரை கூண்டோடு திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
****************/******
மாடக் குளத்தில்
சமையல்செய்ய ஸ்டவ் பற்றவைத்த போது
சேலையில் தீப்பற்றி இளம்பெண் பரிதாப சாவு
மதுரை ஜன7 மாடக்குலத்தில் சமையல் செய்ய ஸ்டவ்பற்ற வைத்த போது சேலையில் தீப்பிடித்து இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாடக்குளம் கந்தன் கந்தன் சேர்வை எட்டாவது தெருவை சேர்ந்தவர் லதா 36. இவர் சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தார்.அப்போது அவரது ஆடையில் தீப்பற்றி தீயில் கருகினார். ஆபத்தான நிலையில் அவரை தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக லதா உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
******************************
அவனியாபுரத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை மதுரை ஜன 7 அவனியாபுரம் பெரியசாமி நகர் எட்டாவது தெருவை சேர்ந்தவர் மருதக்காள்85. இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மகன் செல்வராஜ் கொடுத்த புகாரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
***************//////*********
முன்விரோதம் காரணமாக
வாலிபர் மீது கல்லால் தாக்குதல் நண்பர்கள் 2 பேர் கைது
மதுரை ஜன 7 முன்விரோதம் காரணமாக வாலிபரை கல்லால் தாக்கிய நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆரப்பாளையம் கருப்பையா தேவர்தோப்புவை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் நாராயணன் 27. இவரது நண்பர்கள் மேலப்பொன்னகரம் எட்டாவது தெருவைச் சேர்ந்த சுப்பிரமணிய மகன் மணிகண்டன் அதே பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி மகன் வாசுதேவன். இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கரிமேடு 7வது தெருவில் சென்ற நாராயணனை வழிமறித்து நண்பர்களான மணிகண்டனும், வாசுதேவனும் கல்லால் தாக்கி அவருடைய பைக்சாவியையும் உடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நாராயணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கல்லால் தாக்கிய மணிகண்டனையும்,வாசுதேவனையும் கைது செய்தனர்.
********************************
திருமணம் செய்துவைக்க மறுத்ததால்
பெண்ணின் தந்தை மீது தாக்குதல் போலீஸ் விசாரணை
மதுரை ஜன7. திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் 55. அவரது மகளை திருமணம் செய்து வைக்கும்படி பால்ராஜ் மகன் மஞ்சுநாத் என்பவர் கேட்டுள்ளார். இதற்கு முத்துவேல் மறுத்துவிட்டார் .இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுநாத் தன் நண்பர்கள் சிலருடன் சென்று பெண்ணின் தந்தை முத்துவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர் .இந்த சம்பவம் குறித்து முத்துவேல் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********************************

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: