மதுரையில், பா.ஜ.க. நூதனப் போராட்டம்:

ஆட்டுக்கு, காங்கிரஸ் கட்சி பெயர் வைத்து வெட்டி விருந்து வைத்த பா.ஜ.க.

மதுரை:

பஞ்சாபில், காங்கிரஸ் ஆட்சியில், பாரத பிரதமர் மோடிக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லையென, பா.ஜ.க. வினர் மதுரையில் நூதனப் போராட்டத்தை நடத்தினர்.
மதுரை ரிங் ரோட்டில், பாண்டி கோயிலில், பா.ஜ.க.வினர் பாண்டி முனீஸ்வரருக்கு ஆட்டை காணிக்கையாக அளித்தனர்.
அந்த ஆட்டிற்கு பா.ஜ.க.வினர் காங்கிரஸ் எனப் பெயரிட்டு, ஆட்டை வெட்டி விருந்தை படைத்தனர்.
இந்த நூதனப் போராட்டத்தை அக்கம் பக்கத்தினர் வியப்புடன் பார்த்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: