கோவியேட் மையத்தில், மாநகராட்சி ஆணையர் ஆய ்வு:

மதுரை மாநகராட்;சி
கோவிட் கவனிப்பு மையத்தில், ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆய்வு:

மதுரை:

மதுரை மாநகராட்சி பகுதிகளில், கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சைக்கு முன் பரிசோதனை மையம் அமைக்கப்பட
உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு கலைவாணர் மகப்பேறு மருத்துவமனை
களில் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர்
உத்தரவின்படி, மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி ,பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியினை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வதற்கு மதுரை மாநகராட்சியின் சார்பில் அமெரிக்கன் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு கலைவாணர் மகப்பேறு மருத்துவமனை மற்றும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கோவிட் வகைப்படுத்தும் மையம் மற்றும் கோவிட் கவனிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
இம்மையங்களில், கோவிட் தொற்று பாதிக்கப்பட்டவர்களை நோயில் தீவிரத்திற்கு ஏற்றவாறு வகைப்படுத்தி வீடுகளில் தனிமைப்படுத்துதல், கோவிட் கவனிப்பு மையங்களில் அனுமதித்தல், மருத்துவமனைகளில் அனுமதித்தல் மற்றும் தீவிர சிறப்பு சிகிச்சை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மேற்கண்ட மையங்களுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள கொள்ளப்படுகிறது. மேலும், இந்த ஆய்வின்போது கொரோனா சிகிச்சைக்கு வருபவர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரித்து தினந்தோறும் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும், மருத்துவமனை வளாகப்பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம், தனிநபர் இடைவெளி மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் பொதுமக்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களில் ரூ.86,100 அபராதமும், இன்று (07.01.2022) ரூ.90,700-ம் மாநகராட்சி சுகாதார குழுவினர் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
முன்னதாக, குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலத்தில் மழைநீர் வடிகால், நடைபாதை தடுப்புகள், மின்விளக்குகள் பொருத்துதல், வர்ணம் பூசுதல், சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகளை ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், நகரப்பொறியாளர்
அரசு, உதவி ஆணையாளர்
சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள்
சேகர்,
மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர்
மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்)
சுப்புதாய், சுகாதார அலுவலர்கள்
விஜயகுமார்,
ராஜ்கண்ணன், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: