ரேசன் கடையில், இலவச பொங்கல் பொருட்கள் வழங ்கும் விழா:

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா:

சோழவந்தான்: ஜனவரி, 6.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் நியாய விலை கடையில், தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி
மன்றத் துணைத் தலைவரும், முள்ளிப்பள்ளம் திமுக கிளைச் செயலாளருமான கேபிள் ராஜா பொங்கல் சிறப்பு விற்பனை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இதில், மாவட்ட மகளிரணி சந்தான லட்சுமி, ஊராட்சிக் கவுன்சிலர்கள், முள்ளை சக்தி, பாண்டியம்மாள், செல்லமுத்து, முனீஸ்வரி, சித்ரா, இளங்கோவன், சரஸ்வதி, வண்டிக்கார ராசு, கார்த்திகேயன், முன்னாள் திமுக நிர்வாகி சப்பானி, பாஸ்கரன், காமாட்சி, ஊராட்சி செயலர் மனோ உட்பட கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: