விவசாயிகள் தினம்:

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தினம் விழா :

காரியாபட்டி:

வேளாண்மை துறை சார்பாக விவசாயிகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் . உத்தண்ட ராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களநாதன் ராமசுப்பிர மணியன், மாவட்ட ஆட்சியரின் (வேளாண்) நேர்முக உதவியாளர் சங்கரநாராயணன், மாவட்ட வருவாய் அனைத்துத் துறை அரசு அலுவலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நவீன தொழில்நுட்ப இயந்திரங்களை கொண்டு விவசாய உற்பத்தி பணிகளை சிறப்பாக செய்துவரும் காரியாபட்டி மேல துலுக்கன்
குளத்தை சேர்ந்த மென் பொறியாளர் கிருஷ்ணகுமாரை, மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: