திருவில்லிபுத்தூர் பகுதியில் 50 சதவிகித மானியத்துடன் பருத்தி விதைகள்…..
திருவில்லிபுத்தூர் :
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் உள்ள பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு, 50 சதவிகித மானியத்துடன் பருத்தி விதைகள் வழங்கப்படுவதாக வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் முத்துலட்சுமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் மாசி பட்டம் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, நீண்ட இலை உயர்ரக பருத்தி ரகமான கோ-14 மற்றும் எஸ்.வி.பி.ஆர்-6 ரக பருத்தி விதைகள் தேவையான அளவு தயார் நிலையில் உள்ளது. பருத்தி விதைகள் தேவைப்படும் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்துடன் விதைகள் வழங்கப்படும். நீண்ட இலை பருத்தி உயர் ரகத்தின் சாகுபடி காலம் 155 நாட்கள். எனவே அதிக மகசூல் தரும் பருத்தி விதைகளை, விவசாயிகள் பெற்று பயன் பெறலாம் என்று அறிவிப்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.