நிழல் வலைக்குடில் அமைக்க நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர்:

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்
நடப்பு நிதியாண்டில் (2021-2022) நிழல்வலைக்குடில் அமைக்க
7000 சதுர மீட்டருக்கு ரூபாய் 24.85 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல்:

மதுரை:

மதுரை மாவட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்
நடப்பு நிதியாண்டில் (2021-2022) நிழல்வலைக்குடில் அமைக்க
7000 சதுர மீட்டருக்கு ரூபாய் 24.85 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல் தெரிவிக்கையில்:-
மதுரை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட பயிர் சாகுபடியின் கீழ் 38000 சதுர மீட்டருக்கு நிழல்வலைக்குடில் அமைக்கப்பட்டு 50 சதவிகிதம் மானியமாக ரூபாய் 134.90 இலட்சம் விடுவிக்கப்பட்டதன் மூலமாக 32 விவசாயிகளும் 28500 சதுர மீட்டருக்கு பசுமைக்குடில் அமைக்கப்பட்டு 50 சதவிகிதம் மானியமாக ரூபாய் 130.295 இலட்சம் விடுவிக்கப்பட்டதன் மூலமாக 15 விவசாயிகளும் பயனடைந்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் (2021-2022) நிழல்வலைக்குடில் அமைக்க 7000 சதுர மீட்டருக்கு ரூபாய் 24.85 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 7 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பசுமைக்குடில் அமைக்க 6000 சதுர மீட்டருக்கு ரூபாய் 28.05 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 2 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் 2021-2022-ஆம் ஆண்டிற்கு ரூபாய் 441.389 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் திருமங்கலம் வட்டாரத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டம் பிரதம மந்திரி விவசாய பாசன திட்டத்தின் கீழ் கூடுதல் நீர் மேலாண்மை பணிகள் மற்றும் அரசு கூட்டுப்பண்ணை திட்டம் உள்ளிட்ட பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 விவசாயிகளுக்கு சுமார் 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 50 சதவிகிதம் மானியத்துடன் நிழல்வலைக்குடில் அமைத்து கொடுக்கப்
பட்டுள்ளது. நிழல்வலைக்
குடிலில் நாற்றுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைப்பதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: