காரியாபட்டி பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கும் மானகள்:
வனத் துறை நடவடிக்கை தேவை:
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில், கடந்த சில நாட்களாக மான்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கருவேல காட்டுக்குள் சுற்றிதிரியும் மான்களை நாய்கள் விரட்டி சென்று கடித்துவிடுகின்றன. அத்தோடு மான்கள் சாலையை கடக்கும்போது எதிர்பாராத விபத்துக்களில் சிக்கிவிடுகின்றன. இப்பகுதியில் சுற்றிதிரியும் மான்களை பாதுகாக்க வனத்துறையினர் தகக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப் பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.