ரயிலில் அமர்ந்திருந்த பயணியிடம் வழிப்பறி:
மதுரை:
மதுரையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் மதுரை ரயில்வே நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று
கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவர் ரயில்வே தண்டாவளத்தின் வழியாக வந்து ரயிலில் ஏறி, தங்கசெயின் மற்றும் அவரிடமிருந்த கைபேசியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனராம்.
விசாரணையில்,
திண்டுக்கல் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா என்ற ரயில்வே ஊழியரிடம் இரண்டரை பவுன் தங்க செயின் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து விட்டு தப்பியோடியவர்
களை பற்றி ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.