நான்கு வழிச்சாலையை கடக்க மாணவர்கள் அவதி:

வலையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல நான்கு
வழிச் சாலையை கடக்க பொதுமக்கள் மாணவர்கள் அவதி:

மதுரை:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா அருகே உள்ள மலையன்குளம் ஊராட்சியில் உள்ளது. ஊராட்சிக்கு கிழக்குப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப்பள்ளி உள்ளது .
இங்கு பயிலும் மாணவர்கள் வலையங்குளம் வளையபட்டி, பாரபத்தி
போன்ற சிற்றூர்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் மதுரை தூத்துக்குடி
நான்கு வழிச்சாலையை கடந்து பள்ளிக்கு செல்வதால், சாலை விபத்து ஏற்படுகிறது.
ஏற்கனவே, பள்ளி மாணவர்கள் 3 பேர் பொதுமக்கள் 2 பேர் என ,ஐந்து பேர் வலையங்குளம் சாலை விபத்தில் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய, சூழ்நிலையில் காவல்துறை சார்பில் போக்குவரத்து காவலர் ஒருவரை அனுப்பி காலை 8 மணிமுதல் 10 மணிவரை மாலை 3 மணிமுதல் 5 மணிவரைமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்கபணியில் இருக்க கோடி கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், இப்பகுதியில் மேம்பாலம் அல்லது தரைப் பாலம் அமைத்துக் கொடுத்தால் தங்களுக்கு வசதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்ய முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: