எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி:

காரியாபட்டியல் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம்,
காரியாபட்டியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வருவாய்துறை, சுகாதாரத்துறை மற்றும் சி.இ.ஓ.ஏ. கல்லூரி சார்பாக எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி நடைபெற்றது. காரியாபட்டி தாலுகா அலுவலகம் அருகே, பேரணியை, வட்டாட்சியர் தனக்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், கல்லூரி மாணவர்கள் எய்ட்ஸ் நோய் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
மேலும், மாணவர்கள் கடைகள் வீடுகள் தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். பேரணியில், சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் கல்லூரி தாளாளர் பிரேம்சந்த், முதல்வர் ஜெனிட்டா, எஸ்.பி.எம் .டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி , எய்ட்ஸ் தடுப்பு திட்ட அலுவலர் வேலய்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: