ஒத்தக்கடையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி:
மதுரை:
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம், யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வீ. பாஸ்கரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பாஸ்கரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் நிலையத்தை சேர்ந்த பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், அவசர உதவி எண் 100 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவலன் எஸ்.ஒ.எஸ். செயலி குறித்தும், பள்ளி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர்
மலைச்சாமி,
பாண்டியராஜா, மாவட்ட குழந்தைகள் நலக்குழு சமந்தா ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.