மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொர ுட்கள்:

மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணப்
பொருட்கள் வழங்கல்:

விருதுநகர்:

இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பருவ மழையின் போது வீடு இடிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 3 லட்சம ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் பருவ மழையின் போது வீடுகள் இடிந்து மற்றும் மேற்கூரைகள் இடிந்து சேதமடைந்தது என வட்டாச்சியர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து,
வட்டாச்சியர் தலைமையில் வருவாய்துறையினர் பாதிக்கப்பட்ட இடந்தை பார்வையிட்டனர்.
120 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ‘
பாதிக்கப்பட்ட பொதுமக்களை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டனர் .
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு
வருக்கும் முதற்கட்டமாக, அரிசி பருப்பு போர்வை பாய் மற்றும் தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண உதவிகளை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வழங்குவதற்கு முன் வந்து அவருடைய சொந்த பணத்தில் மூன்று லட்ச ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்களை 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: