தேர்தல் அறிக்கையை நடைமுறைபடுத்துங்கோ: வ ி.ஹெச்.பி.

தேர்தல் அறிக்கையை நடைமுறை படுத்துவதற்கு பதிலாக திராவிட கொள்கைகளை விரிவு படுத்தும் ஆட்சி செய்கிறது திமுக – விஹச்பி நிறுவனர் வேதாதந்தம் பேட்டி:

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ,மதுரை மாவட்ட மாநாடு, விசுவ ஹிந்து பரிஷத் நிறுவனர் வேதாந்தம், மாநில தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அகில இந்திய பார்வட் ப்ளாக் மாநில பொது செயலாளர் கதிரவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மதுரை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் அதிகமான கிராம கோவில்களின் 500க்கும் மேற்பட்ட பூசாரிகளும் கலந்து கொண்டனர்.
இம்நாட்டின் முடிவில், செய்தியாளர்களை சந்தித்த விசுவ ஹிந்து பரிஷத் நிறுவனர் வேதாந்தம், ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போராரு என விளம்பரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுக கொஞ்சம் கொஞ்சமாக இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது.
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து அதற்கு பதிலாக திமுக வின் கொள்கைகளை விரிவு படுத்தும் செயலில் இறங்கியுள்ளது எனவும்,
ஆட்சிக்கு வந்த நாள் முதல் சுமார் 175-க்கும் மேற்பட்ட கிராம கோவில்களை புறம்போக்கு இடத்தில் உள்ளதாக கண்மூடித்தனமாக இடித்து தள்ளியுள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
இது போன்ற கோவில்களை ஆய்வு செய்து பழம்பெருமை வாய்ந்த கோவில்களுக்கு கோவில் பெயரிலேயே பட்டா வழங்க வேண்டும் என, பேட்டியளித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: