திருச்சுழி கிளை நூலகத்தில் வாசகர் கூட்டம் :
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம்,
திருச்சுழி நூலகததில், வாசகர் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் கிளை
நூலக வாசகர் கள் வட்டம் சார்பாக, சிறப்புக் கூட்டம் நடைபெற்றது., வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் தலைமை வகித்தார். கிளை நூலகர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சென்னை ஸ்டடி ஃபிரீஸ் இயக்குனர் மு.சுதந்திரராஜன், கலந்து கொண்டு. நூலக வளர்ச்சிக்கு ரூபாய் பத்தாயிரம் நன்கொடை கொடுத்தார்.
மேலும், நீட் | ஜே.ஈ.ஈ தேர்வுகளுக்குத் தேவையான (புத்தகங்களையும் அன்பளிப்பாகக் கொடுத்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கட்டிடப் பொறியாளர் பூமிமோகன், மற்றும் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவிகள், நூலகப் பணியாளர்கள் மஞ்சுளா,. குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.