குழந்தைகள் விளையாட்டு பலூனுக்கு காற்றேற்றும் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு:
மதுரை:
மதுரை பைபாஸ் பகுதியில் சாலையோரத்தில் குழந்தைகள் விளையாட்டு பலூன் விற்பனையாளரான அமீர்முகமது வழக்கம்போல் பலூனில் காற்றை நிரப்ப முயற்சி செய்யும் போது, எதிர்பாராத வகையில் சிலிண்டர் வெடித்ததில், சுமார் 100 அடி உயரத்திற்கு அதன் பாகங்கள் மூன்று துண்டுகளாகப் பிரிந்து எதிரே உள்ள நான்கு மாடிகள் கொண்ட வணிக வளாகம் நான்காவது தளத்திலுள்ள கண்ணாடியை உடைத்து ஒரு பாகம் கீழே விழுந்தது . மற்றும் தனியார் மருத்துவமனை நுழைவு வாயிலில் விழுந்தது. நல்வாய்ப்பாக, இவ்விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சம்பவம் குறித்து, மதுரை, எஸ் .எஸ். காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்கான காரணம் குறித்து விற்பனையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.