9 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம்:

மதுரையிலிருந்து 9 மணிநேரம் தாமதமாக புறப்பட்ட துபாய் விமானம்:

160 பயணிகள் காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து துபாய் செல்ல இரவு 9.20 மணி காத்திருப்பு:

மதுரை:

மதுரையிலிருந்து துபாய் செல்லும் பயணிகள் விமானம் புதன்கிழமை ஒன்பதரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டது.
அதில் செல்ல இருந்த 160 பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மதுரையிலிருந்து புதன்கிழமை காலை 11 மணிக்கு துபாய்க்கு செல்லும் விமானத்தில் செல்ல 160 பயணிகள் தயாராக இருந்தனர்.
ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானம் வழக்கமாக மும்பையிலிருந்து மதுரைக்கு காலை 8.30 மணிக்கு வந்து பின்பு 11 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும்.
இந்நிலையில் புதன்கிழமை மும்பையிருந்து வரவேண்டிய விமானம் இரவு 7 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது. பின்பு மதுரையிலிருந்து இரவு 9.20 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டுச்சென்றது.
விமானம் தாமததால் ,அதில் செல்ல இருந்த பயணிகள் 160 பேர் விமான நிலையத்திலேயே காலை முதல் காத்திருந்தனர்.
பயணிகள் விமான நிலைய வளாகத்திற்குள்ளே ஒன்பதரை
மணிநேரம் காத்திருந்ததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: