மதுரை நகரில் நடந்த குற்ற சம்பவங்கள்: போலீ ஸார் விசாரணை:

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர் மனமுடைந்து தற்கொலை:

மதுரை:

மதுரை
வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குருசாமி 75 .இவர் பத்து வருடங்களாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்
பட்டிருந்தார் .
இதற்கான சிகிச்சை பெற்றுவந்தும், குணமடையவில்லை. இதனால், மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தத்தனேரியில்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை:

மதுரை தத்தனேரி புது தெருவை சேர்ந்தவர் சித்ரா 44. இவர் சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் .
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ,செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்ராவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதூரில்
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை:

மதுரை புதூர் சத்யா நகர் சம்பக்குளம் முதல் தெருவை சேர்ந்தவர் அழகுராஜா மகன் அழகு கார்த்திக்28. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, கே.புதூர் போலீசார் வழக்குப்
பதிவு செய்து அழகு கார்த்திக்கின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லாபுரத்தில்
கஞ்சாவுடன் மூதாட்டி கைது:

மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகர் கால்வாய் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக ஜெய்ஹிந்துபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணி சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்த வில்லாபுரம் தென்றல் நகர் சுண்ணாம்பு காளவாசல் பகுதியைச் சேர்ந்த மூக்கம்மாள் 60. என்ற மூதாட்டியை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: