மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் க்கு அதிமுகவினர் வரவேற்பு:
மதுரை:
விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் அதிமுக கார்கள் அணிவகுப்பால் ,
விமான நிலையம் செல்லும் வழியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விமான நிலையத்திலிருந்துவெளியே செல்ல முடியாமலும்,
வெளியிலிருந்து விமான நிலையம் உள்ளே செல்ல முடியாமலும், பயணிகள், மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்
பாளராக பதவியேற்ற ஓபிஎஸ் மதுரை வந்ததும், அவருக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதிமுக நகர் மாவட்டம் சார்பில் விமான நிலையம் செல்லும் வழியில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஓபிஎஸ், உடன் வந்த வாகனங்கள் அணிவகுப்பால், விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும் வழியில் இருபுறமும் மற்ற வாகனங்கள் செல்லாமல் அணிவித்து நூற்றுக்கணக்கான கார்கள் நின்றன.
இதனால், விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதேபோல், விமான நிலையத்திற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வழியிலும் அதிமுக தொண்டர்கள் நின்றதால், செல்ல முடியாமல் திக்கித் திணறி சென்றனர்.
தாரை தப்பட்டை முழங்க யானை வரவேற்பளிக்க வந்த ஒ.பி.எஸ் தொண்டர்களுடன் உற்சாக போஸ் கொடுத்தார்.
இதனால், திரண்ட அதிமுக தொண்டர்களால் போக்குவரத்தை சீர்செய்ய போலீஸார் திணறினர்.
மேலும், அதிமுக வாகனங்களுக்கிடையில் போலீஸாரின் வாகனமும் சிக்கியது
அதிமுக தொண்டர்கள் வரவேற்பால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பயணிகள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இனி வரும் காலங்களில்
அரசியல் கட்சியினர் வரவேற்பு அளித்தால், விமான நிலையம் வெளிய பெருங்குடி பகுதிகளில் வரவேற்பு அளித்தால் பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் சிரமமின்றி செல்ல முடியும்.