திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை, அதிமுக முடக்கவில்லை: முன்னாள் அமைச்சர்:

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அதிமுக ஆட்சியில் முடக்கவில்லை

அம்மா நினைவாலயத்தில் வன்முறை செய்த கயவர்களை அம்மா ஆன்மா தண்டிக்கும்

முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் ஆவேசம்:

மதுரை:

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்றது .
இந்த கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் எம் எல் ஏ.தலைமை தாங்கினார்.
மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். மற்றும் இந்த கூட்டத்தில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல் ,தனராஜன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ், கொரியர் கணேசன், அன்பழகன், ராமசாமி ,மகாலிங்கம், முருகேசன், ரவிச்சந்திரன், பிச்சை ராஜன், நகர செயலாளர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
உலக அரசியல் இயக்கத்திற்கு இன்றைக்கு இலக்கணமாய் இந்த இயக்கம் திகழ்கிறது ஜனநாயகத்துக்கு உயிர் கொடுத்து வரலாற்றில்பொன்எழுத்துக்களால் எழுதப்படடும் வகையில் சரித்திர நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
நடைபெற்ற கழக ஒருங்கிணைப்பாளர்கள்
தேர்தலில் ஜனநாயக முறைப்படி கழக ஒருங்கிணைப்பாளராக, ஓபிஎஸ், கழக இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்
கப்பட்டுள்ளனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் ,
நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். தற்போது, இந்த பணி அவர்களுக்கு சவாலான பணியாக இருந்தாலும், அதனை கழக 2 கோடி தொண்டர்கள் ஆதரவோடு சாதனையாக மாற்றிக் காட்டுவார்கள்.
அம்மா ஆட்சியில், கொண்டுவர கொண்டுவரப்பட்ட திட்டங்களான அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்க நினைக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உழவர்சந்தை சமத்துவபுரம் போன்ற திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் முடக்கவில்லை.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 29 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் விலை குறைக்
கப்படவில்லை. அதுமட்டுமல்லாது, ஆறு மாதங்கள் ஆகியும், திமுக தேர்தல் வாக்குறுதியை எதையும் நிறைவேற்றப்
படவில்லை.
தற்போது ,மழை காலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஆனால், முதலமைச்சர் அடிக்கடி தண்ணீரில் நடக்கிறார். ஆனால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடந்து கொண்டே சென்றால் தீர்வு காண முடியுமா? முதலமைச்சருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளது. அதனால், நடக்கிறாரா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த ஐந்தாம் தேதி புரட்சித்தலைவி அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டு,அம்மா நினைவாலயத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மரியாதையை செய்து திரும்புகின்றபோது, காலி கயவர் கூட்டம் அம்மாவின் திருப்பெயரை வைத்து கொண்டுஅராஜகம் செய்தார்கள்.
புரட்சித்தலைவி அம்மா வன்முறையை அராஜகத்தை எந்நாளும் ஏற்றுக்கொண்டது கிடையாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளால் அதிமுகவின் புனிதற்கு மாசு ஏற்படும் என்று கனவுகாண்கிற திமுகவின் காவல்துறை வழிகாட்டி இருக்கிறது.
சட்ட ஒழுங்கு கேள்விக்
குறியாக்கும் வகையில், இந்த நிகழ்வு அமைந்திருந்தது கைகட்டி வாய்மூடி இந்த வன்முறைகளுக்கு சிவப்பு கம்பளத்தை விரித்த திமுக அரசின் காவல்துறையை கண்டிக்கிறோம். அராஜகம் யார் செய்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அம்மா காலத்தில் கழகத்தில் இது போன்ற வன்முறையை அனுமதிக்கவில்லை. ஆரம்ப நிலையை அறிந்து வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அம்மா நினைவாலயத்தில் வன்முறை நிகழ்த்திய கயவர்களை அம்மா ஆத்மா நிச்சயம் தண்டிக்கும். வருகின்ற 9-ஆம் தேதி வாடிப்பட்டியில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. என்று கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: