சாலையில் ஓடும் மறுகால், மீன் பிடிக்கும் பொதுமக்கள்:

சாலையில் ஓடிய மறுகால், தண்ணீர் துள்ளி குதித்த மீன்களை அள்ளி சென்ற பொதுமக்கள்:

மதுரை:

வடகிழக்கு பருவமழை தீவிரமான காரணத்தினால் அனைத்து கண்மாய் களும் நிரம்பி மறுகால் பாயத் தொடங்கியது.
இந்த நிலையில், மதுரை மாடக்குளம் கண்மாய் முழு அளவையும் எட்டி மறுகால் பாய்ந்தது. மறுகால் பாயும் நீரானது கிருதுமால் நதியில் கலந்து செல்வது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக கிருதுமால் நதி தூர்வாரப்படாத வெறும் சாக்கடை நீர் மட்டுமே சென்று கொண்டிருந்தது. இப்பொழுது, மாடக்குளம் கண்மாய் இலிருந்து மறுகால் பாய்வதால் நீர்வரத்து அதிகரித்து. இதனால், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலையில் நீர் செல்லும் நிலை ஏற்பட்டது மறுகால் பாயும் தண்ணீருடன் மீன்களும் அதிக அளவு வருவதால் மீன்களை பிடிக்க பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லிஸ் நகர் …சாலை முத்து நகர். மெயின் ரோட்டில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வாய்க்கால் வழியாக தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர். மழைநீர் வாய்க்காலில் சிமெண்ட் ஸ்லாப் போடப்பட்டுள்ளது. அதை உடைத்து அதில் இருந்து மீன்களை பிடித்து செல்கின்றனர். இதனால், இரவு நேரங்களில் அந்த நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அதில் கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் செல்லும் நீரை மாற்று வழியில் திருப்பி விட வேண்டும் எனவும் சிமெண்ட் ஸ்லாப் யாரும் உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: