மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்ப ு:

மதுரை விமான நிலையத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு:

மதுரை:

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா ,மதுரை விமான நிலையத்தில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் உள்வளாகம்
ஓடுதளம் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் விமான நிலைய வெளிப்புறம் ஆகியவற்றில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், விமான நிலைய நுழைவாயில் சோதனை சாவடி மற்றும் வெளி வளாகம் ஆகிய பகுதிகளில் மதுரை மாநகர போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிவேக அதிரடிப்படை வீரர்கள் அடங்கிய குழுவினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: